ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும் ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடிக்கும் படம் '100% காதல்'. தெலுங்குப் படத்தின் மறுபதிப்பான இதை இயக்கி இருப்பவர் சந்திரமவுலி. "இது வித்தியாசமான, உருக்கமான காதல் கதை. நாசர், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சதீஷ், மனோபாலாவின் நகைச்சுவை ரசிகர்களை மகிழ்விக்கும். ஜி.வி.பிரகாஷ்தான் படத்தின் இசையமைப்பாளரும்கூட. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் இப்படம் வெளியீடு காணும்," என்கிறார் இயக்குநர் சந்திரமவுலி.
ஜி.வி.பிரகாஷின் '100% காதல்'
1 mins read
-

