"ஜல்லிக்கட்டு, காவிரி, ஏன் ஒரு கண் சிமிட்டலைக்கூட நம்மால் பரபரப்பான விஷயமாக்க முடிந்தது. ஒரு குழந்தையின், ஓர் உயிரின், மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும் இரங்கலுக்கும் மட்டுமே உரியதா?" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி. கடுமையான தண்டனை பற்றிய பயம் இல்லையென்றால் பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், காலம் கடக்கும் முன்னே ஒரு மாற்றத்தை அனை வரும் ஒன்றிணைந்து ஏற்படுத்தமுடியும் எனத் தெரிவித்துள்ளார். தம்மை டுவிட்டரில் பின்தொடரும் எட்டு லட்சம் பேருக்கும் இத்தகவலைப் பகிர்ந்துள்ள தாகவும் இது அமைதிகாக்கும் நேரமல்ல என்றும் வரலட்சுமி கூறியுள்ளார்.
"பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை கொடு, எங்களுக்கு நீதி வேண்டும் எனப் போராடும் நேரமிது. "நான் வரலக்ஷ்மி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை, கொடூரமானவர்கள் தங்கள் தவறுக ளுக்குத் தண்டனை பெறும் காலம் நெருங்கி விட்டது. இனிமேலும் ஒரு குழந்தையோ, அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்கக் கூடாது. அதற்கு மரணதண்டனை ஒன்றே தீர்வு," என டுவிட்டரில் முழங்கி உள்ளார் வரலட்சுமி. நியாயமான விஷயங்களுக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும், அநீதியை எதிர்த்து நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம் என்பது சமூகம் சகித்துக் கொள்ளவேண்டிய விஷயமல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். வரலட்சுமியின் இந்தக் கோபமான பதிவை திரையுலகத்தைச் சார்ந்த பலர் வரவேற்றுள்ள னர். மேலும், சமூக ஆர்வலர்களும் பெண் பாதுகாப்பு குறித்த அவரது கருத்துக்களையும் தைரியமான போக்கையும் பாராட்டி உள்ளனர். சக நடிகைகளும் வரலட்சுமியைத் தொடர்பு கொண்டு பேசியதுடன், அவருக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

