ராதிகா ஏற்ற சவாலான கதாபாத்திரம்

ராதிகா ஏற்ற சவாலான கதாபாத்திரம்

1 mins read
d87a33ef-589b-4e06-a50d-7670be5fb464
-
Google News Preferred Icon

இரண்டாம் உலகப் போர் தொடர்பில் ஏற்கெனவே நிறைய படங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மீண்டும் இப்போரை மையமாக வைத்து ஹாலிவுட்டில் ஒரு படம் உருவாகிறது. இது முந்தைய படங்களை விட வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு 'வேல்ட் வார்- 2' என்று தலைப்பிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் போது ரகசிய உளவாளியாக செயல்பட்டவர் நூர் இனயத் கான். லண்டனில் வசித்து வந்த 30 வயதான அவர், இரண்டாம் உலகப் போர் நடந்த போது, பிரிட்டனின் ரகசிய உளவாளியாக வேலை பார்த்தார். பிரான்சை, ஜெர்மனி கைப்பற்றியபோது அங்கு வானொலி நிலையத்தில் வேலை பார்த்து ரகசியங்களை சேகரித்தார்.

பின்னர் ஹிட்லர் படையினர் அவர் உளவாளி என்பதை கண்டறிந்து கைது செய்து 1944இல் சுட்டுக் கொன்றனர். இந்த நூர் இனயத் கதாபாத்திரத்தில்தான் ராதிகா ஆப்தே நடிக்க உள்ளார். இது தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு என்றும், தனது திரை வாழ்க்கையில் சவாலான கதாபாத்திரம் என்றும் கூறுகிறார் ராதிகா ஆப்தே.