மாரிமுத்து: சாமானியர்களின் வாழ்வியலைப் பேசும் படைப்பு

மாரிமுத்து: சாமானியர்களின் வாழ்வியலைப் பேசும் படைப்பு

2 mins read
94857c9d-63ec-46f4-827f-c93ea47d2682
-

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றை பின்புலமாக வைத்து உருவாகியுள்ள படம் 'தொரட்டி'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் பி.மாரிமுத்து. ஷமன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஷமன் மித்ரூ தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகனும் அவர்தான். கடந்த 1980களில் தென் மாவட் டத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறதாம் இப்படம். "ஷமன் மித்ரூ, மாயன் என்ற கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் தத்ரூபமாக நடித்திருக்கிறார் என்று கூறுவதைவிட, அந்த கதாபாத்திரமா கவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல் லலாம். கதாநாயகி புதுமுகம் சத்யகலா, செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார்.

"மண்ணும் மரபும் சார்ந்த கதை களுக்கு எப்போதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்தான். அப்படிப்பட்ட உண்மைக்கதை ஒரு படமாக திரையிடப்படும்போது அது சுலபமாக வெற்றி பெறுகிறது. "அப்படிப்பட்ட மனதை ஈர்க்கக் கூடிய, படம் பார்ப்பவர்களைப் பாதிக்கக் கூடிய உண்மைச் சம்பவம் தான் இந்த 'தொரட்டி' படத்தின் கரு.

"வாழ்க்கையில் வெந்த சோறு, சுட்ட கறி, பட்டை சாராயம் இவற்றுக் காக எந்த பழி பாவத்தையும் செய்யத் துடிக்கும் ஒரு கூட்டம் குறித்து விவரிக்கிறோம். "சினேகனின் அற்புதமான கிராமிய பாடல் வரிகளுக்கு, ஜித்தின் ரோஷன் இசையமைக்கிறார். சாமானியர்களின் வாழ்வியலைப் பேசும் இந்தப் படைப்பு சராசரி ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். அதற்கேற்ப மிகவும் விறு விறுப்பான திரைக்கதையை அமைத் துள்ளோம்," என்கிறார் மாரிமுத்து.

'தொரட்டி' படத்தில் இடம்பெறும் காட்சியில் ஷமன் மித்ரூ, சத்யகலா.