வடிவேலுக்கு முன்பு வெற்றிப் படமாக அமைந்த 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' தற்போது தலைவலியாக உருவெடுத் துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் சிம்பு தேவன். இயக்குநர் சங்கர் தயாரிக்கிறார். முதல் பாகம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் தயாராகிறது. இதற்காக வடிவேலுவுக்கு பெருந் தொகை சம்பளமாகப் பேசப் பட்டது. படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் கடந்த நிலையில், திடீரென தயாரிப்புத் தரப்புக்கும் வடிவேலுவுக்கும் இடையே பிரச் சினை வெடித்தது. இதையடுத்து படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் வடிவேலு. பலமுறை சமாதானப் பேச்சு வார்த்தை நடந்தும்கூட பலன் இல்லை. இதனால் தயாரிப்புத் தரப்புக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் சங்கர். நடிகர் சங்கமும் வடிவேலு விடம் விளக்கம் கேட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க முடியாது எனத் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார் வடி வேலு. படத்தை திட்டமிட்டபடி எடுக்காததே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். "கெட்ட நோக்கத்துடன் எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப் பாளர் சங்கத்தில் புகார் கடி தத்தைக் கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் திரையுலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

