உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் 'சிம்பா'. அரவிந்த் ஸ்ரீதர் இயக்குகி றார். படத்தின் நாயகன் பரத். பானுஸ்ரீ மெகரா, சுவாதி தீக்ஷித் என இரண்டு கதாநாயகிகள். பிரேம்ஜி, ரமணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். "இளையர் ஒருவர் தனது வாழ்க்கையில் நடக்கும் கசப்பான சம்பவத்தால் கெட்ட பழக்கங்களுக்கு ஆட்படுகிறார். பின்னர் அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.
இதை உணர்வுபூர்வமாகவும் விறுவிறுப்பான திரைக்கதை மூலமும் உரு வாக்கியுள்ளோம். என் நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படை யாகக் கொண்டுதான் இப்படத்தை உருவாக்கினோம். அந்த இளையர் கதாபாத்திரத்துக்கு பரத் கச்சித மாகப் பொருந்துவார் எனத் தோன்றியது. அவரிடம் கேட்ட போது முதலில் தயங்கினார். பின்னர் முழுக் கதையையும் கேட்ட பிறகு நடிக்க சம்மதம் தெரிவித்தார்," என்று கூறுகிறார் அரவிந்த் ஸ்ரீதர்.

