கடுமையாக உழைத்த மகிமா

கடுமையாக உழைத்த மகிமா

1 mins read
b6fa2fa6-b436-443a-9c09-35ff9c76af6e
-

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள 'பக்கா' படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது. அவர் தற்போது ராஜ்தீப் இயக்கத்தில் 'அசுரகுரு' படத்தில் நடித்து வருகிறார். இது சண்டைக் காட்சிகள் நிறைந்த திகில் படமாம். கதாநாயகி காதல் காட்சிகள் மட்டுமின்றி சண்டைக் காட்சி களிலும் அசத்தக்கூடிய தைரியமான பெண்ணாக இருக்க வேண்டும். நாயகிக்கான தேடுதல் வேட்டை நடந்தது. இறுதியில் தேர்வானார் மகிமா நம்பியார். இக்கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மகிமா, 'புல்லட்' வகை இருசக்கர வாகனம் ஓட்டுதல், வில் வித்தை, மலை ஏற்றம் போன்ற கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டாராம். "மகிமாவின் கடுமையான உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் அவருக்கு நல்லதொரு திருப்புமுனையாக அமையும்," என்று கூறுகிறார் இயக்குநர் ராஜ்தீப்.