'கடும் கோபம் வருகிறது' தவறு செய்தவர்களை சிலர் ஆதரிப்பதைக் கண்டால் தமக்கு கடும் கோபம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி. ரத்த தானம், கண் தானம் செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலக சண்டைக் கலை ஞர்கள் சங்கத்தின் 51ஆவது ஆண்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. இதில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவையொட்டி நடைபெற்ற மருத்துவ முகாமில் சண்டைக் கலைஞர்களின் குடும் பத்தாருக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியும் ரத்த தானம் செய்தார். பின்னர் நிகழ்வில் பேசிய அவர், ஒவ்வொரு ஆண் டும் ரத்த தானம் செய்வது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றார். நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிஃபாவை நினைக்கும்போது மனம் கலங்குவதாகத் தெரிவித்தார். "அந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. தவறு செய்பவர்களை சிலர் ஆதரிப்பதைக் காணும் போது உச்சக்கட்ட கோபம் வருகிறது. "பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பது போல், பெண் குழந்தைகளை மதிக்க தனி யாகக் கற்றுக் கொடுக்கணும் போல் இருக்கிறது," என்றார் விஜய் சேதுபதி.
மக்களுக்காக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தாத ஒருதரப்பினர், நாம் எந்த சாதி, மதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாடம் எடுப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார். "இத்தகையவர்களிடம் இருந்து நாம் தான் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும். கொடூரத் தவற்றைச் செய்தவர் களுக்கு எத்தகைய தண்டனை கொடுத் தாலும் போதாது, தவறு செய்தவர்களை ஆதரிக்கும் போக்கை நினைத்தால் அசிங்கமாக, அருவருப்பாக இருக்கிறது," என்றார் விஜய் சேதுபதி.
முன்னதாக, சண்டைக் கலைஞர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பு உணர்வையும் சேதுபதி வெகுவாகப் பாராட்டினார். "எங்களைப் போன்ற கதாநாயகர்கள் சண்டைக் காட்சிகளில் வீரம் காட்டுவதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். நான் இன்று ஒரு நாள் மட்டுமே ரத்த தானம் செய் துள்ளேன். "ஆனால் சண்டைக் கலைஞர்கள் தினந்தோறும் படப்பிடிப்பில் எங்களுக்காக ரத்தம் சிந்துகிறார்கள். "சண்டைக் கலைஞர்களின் விழாவில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்ததை உங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக நினைக்கிறன்.

