விஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு

விஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு

1 mins read
3317e114-b481-4324-897b-32581efb2135
-

விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' படம் வெளியீட்டுக்குத் தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி யாகி இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது 'திமிரு புடிச்சவன்' என்ற படத் தில் நடித்து வருகிறார். இந் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை 'மூடர்கூடம்' படத்தை இயக்கிய எம்.நவீன் இயக்க விருக்கிறார். அம்மா கிரியே ஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதத்தில் துவங்க இருக்கிறது. படத்தில் பணியாற்றவிருக்கும் நடிகர்கள், கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.