'ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை அடிப்பேன்'

'ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை அடிப்பேன்'

1 mins read
69e07779-d96b-4fde-9067-317f55ac955d
-

தான் நடித்து வரும் படங்கள் தனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும் என் றும் அதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மன தைக் கொள்ளை அடிப்பேன் என்றும் நடிகை ரித்து வர்மா கூறியுள்ளார். தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்ட தாரி-2' படத்தில் நடித்தவர் ரித்து. கலையரசனுடன் 'சைனா', விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்', துல்கர் சல்மானுடன் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

"துருவ நட்சத்திரம்' கவுதம் மேனன் படம். நான் எதிர்பார்த்தது போலவே இப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத் திரத்தை எனக்குக் கொடுத்திருக் கிறார். இதுபோல் நான் நடிக்கும் மற்ற படங்களும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும். நிச்சயம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பேன்," என்கிறார் ரித்து.