சவால் விடும் வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரெஜினா

1 mins read
003ebde9-f2f2-4d16-af79-a020dd019c3b
-

ரெஜினா தமிழில் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமானாலும் அவர் தெலுங்கு படங்களில் நடிப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார். தெலுங்கில் ராம்சரண் நடித்து அண்மையில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது 'ரங்கஸ்தலம்' படம். தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைகளில் இந்தப் படத்தைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். அதிலும் அந்தப் படத்தின் நாயகன் ராம்சரணின் நடிப்பு, நடிகை ரெஜினாவிற்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாம். அதுபற்றி ரெஜினா கூறுகையில், "காது கேளாத 'மெக்கானிக்' வேடத்தில் இயல்பாக நடித்திருந்தார் ராம்சரண். எனக்கும் இதுபோன்ற வேடத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது.

"இப்போது தென் மாநில திரைத்துறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத் தக்கது. "சவால் விடும் அளவுக்கு வேடங்கள் கிடைத்தால்தான் நம்முடைய திறமையை நிரூபிக்க முடியும். இதுபோன்ற வேடத்தில் நடிக்க யார் என்னை அணுகினாலும் உடனே சம்மதம் தெரிவிப்பேன். படத்தில் நடித்து என்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்வேன்," என்கிறார் ரெஜினா.