தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பாஜக உறுப்பினர் எஸ்.வி. சேகரின் கருத்து அருவருக்கத்தக்கது'

1 mins read
8d6b6e8e-641a-4cbe-83db-76893e411696
-

எஸ்.வி.சேகருக்கு சிக்கல் சென்னை: பெண் பத்திரிகை யாளர் கன்னத்தைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டிவிட்ட விவ காரம் இன்னமும் ஓய்ந்த பாடில்லை. இதில் நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகரும் சிக்கி யுள்ளார். பெண் பத்திரிகையாளர் ஒருவர் கன்னத்தில் ஆளுநர் தட்டியதற்காக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து அந்த பெண் செய்தியாளரிடம் ஆளுநர் மன்னிப்புக் கேட்டார். இந்தப் பிரச்சினை ஓய் வதற்குள் அந்த பெண் பத்திரி கையாளரைப் பற்றி ஃபேஸ்புக் கில் ஒருவர் பதிவிட்ட கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்துகொண்டார். பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையில் அந்த கருத்து இருந்ததாகக் கூறப் படுகிறது. உடனே அந்தப் பகிர்வை எஸ்.வி. சேகர் நீக்கி விட்டாலும் அவருக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது.

திமுக எம்பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். "ஊடகத் துறையில் உள்ள பெண்கள் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்.வி. சேகரின் கருத்து அருவருக்கத்தக்கது. கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியது. மற்றொருவரின் பதிவை நான் பகிர்ந்தேன் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. அந்த முகநூல் பதிவு, அருவருக்கத் தக்க மனநிலையையே காட்டு கிறது," என்று கனிமொழி அதில் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.