தன்னுடன் ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷை, 'விஜய் 62' படத்திற்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார் நடிகர் விஜய். விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'விஜய் 62' படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் ராதாரவி, பழ கருப்பையா, தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி முக்கியமான காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. பட அதிபர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தத்தால் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்தனர். தற்போது 'விஜய் 62' படக்குழுவினர் அடுத்தக் கட்டமாக ஏப்ரல் 25ஆம் தேதி வெளிநாடு செல்ல இருக்கிறார்கள். வெளிநாட்டில் விஜய், கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட பாடல் காட்சியையும் முக்கியமான சண்டைக் காட்சியையும் படமாக்க இருக்கி றார்கள்.
சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தைத் தீபாவளிக்கு வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

