பிந்துவை நினைத்து வருத்தப்படும் ரசிகர்கள்

பிந்துவை நினைத்து வருத்தப்படும் ரசிகர்கள்

1 mins read
6b550cb0-1300-4078-9e27-579ffaa2f06d
-
Google News Preferred Icon

'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் ஓவியா போன்றே புகழ்பெற்றவர் பிந்து மாதவி. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. கண்ணழகி பிந்து மாதவி இரண்டு நாட்கள் தூங்காமல், கண்கள் சிவந்துபோய் தலைவிரி கோலமாக இருக்கும் தன்னுடைய படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட படத்தைப் பார்த்த ரசிகர்கள் அன்புடன், "என்னம்மா ஆச்சு உனக்கு?" என்று விசாரிக்கத் தொடங்கினர்.

அதற்குப் பதிலளித்த பிந்து மாதவி, "நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை," என்று தெரிவித்திருந்தார். "ராத்திரி முழுவதும் தூக்கம் வராமல் அந்த அளவுக்கு அப்படி என்னம்மா உனக்கு சோகம்," என்று ரசிகர்கள் அவரிடம் கேட்டுள்ளனர். சிலரோ "அம்மாடி பேய்," என்று பதிவிட்டிருந்தனர். "நீங்க பேய் மாதிரி இருந்தாலும் அதுவும் அழகுதான்," எனச் சில ரசிகர்கள் பதிவிட்டிருக்கிறார்கள். ஆனால் ஏன் இந்த பிந்து மாதவி இப்படி ஒரு படத்தை வெளியிட்டார்? அதனால் அவர் மீது இருக்கும் மதிப்பு குறையும் என்று அவருக்குத் தெரியாதா? என்று நடிகைகள் கிசுகிசுக்கத் தொடங்கி இருக்கி றார்கள்.