மனிஷா கொய்ராலா போன்று பெரிய நடிகையாக வேண்டும் என்பதே தமது சிறு வயது ஆசையாக இருந்தது என்கிறார் அதிதிராவ். 'காற்று வெளியிடை' மூலம் தமிழக ரசிர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர். தற்போது அரவிந்த்சாமி, சிம்புவுன் 'செவ்வ சிவந்த வானம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிதி வாயைத் திறந்தால் மணிரத்னம் புராணமாக இருக்கிறது. "சிறு வயது முதலே நான் மணிரத்னத்தின் ரசிகை. நடிகர் நடிகைகளிடம் நுணுக்கமாக வேலை வாங்குவதில் அவர் திறமையானவர்.
வித்தியாசமான கதைகள், புதிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் எனும் ஆசை இருக்கிறது. "சிறு வயதில் 'பம்பாய்' படத்தைப் பார்த்து மனிஷாவின் ரசிகையானேன். அவரைப் போல் நடிகையாக வேண்டும் என்பதற்காக நடனம் கற்றேன். அதன் பிறகு எனக்குப் பிடித்தப் மணிரத்னம் படத் தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. மணிசார் மாடியில் இருந்து கீழே குதிக்கச் சொன்னாலும் யோசிக்காமல் குதிப்பேன். "என்னைக் கைதூக்கிவிட திரையுலகில் உறவினர்கள் யாரும் இல்லை. சிரமப்பட்டுத்தான், அலைந்து திரிந்துதான் வாய்ப்புகள் தேடினேன். இன்னும் எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் அமையவில்லை," என்கிறார் அதிதிராவ்.

