கடந்த மூன்று ஆண்டுகளாக திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த சதா, 'டார்ச் லைட்' மூலம் மறுபிரவேசம் செய்கிறார். படம் குறித்து பேசத் துவங்கினால் பரவசமும் பரபரப்புமாய் தகவல்களைக் கொட்டுகிறார். மூன்று ஆண்டுகளாக ஏன் நடிக்கவில்லை என்று பார்ப்பவர்கள் எல்லாம் கேட்கிறார் களாம். வாய்ப்பு கிடைக்கவில்லையா? என்று நக்கலாக கேட்பவர்களை சதா கண்டுகொள்வதில்லை. "உண்மையான காரணம் என்ன என்பது எனது நலன் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் நன்றாகத் தெரியும். "சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதால் தான் சினிமாவில் நடிக்கவோ கவனம் செலுத்தவோ இயலவில்லை.
"பொதுவாக தொலைக்காட்சி ரியா லிட்டி நிகழ்ச்சிகள் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங் கள் மட்டுமே நீடிக்கும். ஆனால் நான் பங்கேற்ற, தெலுங்கு தொலைக் காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான அக்குறிப்பிட்ட நிகழ்ச்சி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒளிபரப் பானது. "அதில் பங்கேற்க வேண்டும் என மனதார விரும்பினேன். எனது சுய விருப்பத்தின் பேரிலேயே திரைப்படங்களில் நடிப்ப தையும் தவிர்த்தேன். அதற் காக நான் திட்டமிட்டு கோடம்பாக்கத்தைப் புறக் கணித்ததாகக் கூறப்படு வது தவறு. "மூன்று ஆண்டு இடைவெளி என்பது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அந்த சின்னத்திரை நிகழ்ச்சிக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்தது. எனவே தான் அதை விட்டு விலக விரும்பவில்லை," என்கிறார் சதா.

