நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அவ்வப்போது பரபரப்புத் தகவல்கள் வெளியாவது வாடிக்கைதான். அவருக்கும் மாமியார் ஜெயாபச்சனுக் கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் ஐஸ்வர்யா ராய் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. மாமியாரின் 70வது பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப் பட்ட போது ஐஸ்வர்யா அதைப் புறக் கணித்ததாகவும் தகவல் வெளி யானது. இதை அமிதாப் குடும்பத்தார் மறுக்கவில்லை. இந்நிலையில் தன் கணவரது நடவடிக்கைகளால் ஐஸ்வர்யா அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் கணவர் அபிஷேக் பச்சனின் கைபேசியை எடுத்து அதில் உள்ள தகவல்கள், புகைப்படங்களை ஐஸ்வர்யா பார்த்ததாகவும், இதை அபிஷேக் கண்டித்ததாகவும் ஊட கங்கள் செய்தி வெளியிட்டன. இதன் தொடர்ச்சியாக அவர் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி வேறொரு வீட்டில் வசித்து வருவதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

