புதுப்படம் ஒன்றில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அஞ்சலி. இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய வெற்றிப் படங் களை இயக்கிய எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சேதுபதியுடன் மோதும் வில்லனாக லிங்கா ஒப்பந்தமாகியுள்ளார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். "தென்காசியிலும் மலேசியா விலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதற்கு தயாராகி வரு கிறேன்.
"விஜய் சேதுபதி அருமையான நடிகர். அவருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. "அவரது இயல்பான, யதார்த்தமான நடிப்புக்கு ஈடுகொடுக்க வேண்டுமே என்பதுதான் எனது தற்போதைய கவலை," என்று சிரித்தபடி சொல்கிறார் அஞ்சலி.

