தமிழ்க் கலாசாரம் தம்மை வெகுவாக ஈர்த்திருப்பதாகச் சொல்கிறார் இளம் நாயகி ஷாலினி பாண்டே. தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான இவர், தற்போது கோடம்பாக்கத்திலும் கால்பதித்துள்ளார். '100 சதவீதம் காதல்' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு இவர்தான் ஜோடி. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், தமிழும் தமிழ் கலாசாரமும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறியுள்ளார். "தமிழ்நாட்டு கிராமத்துப் பெண்ணாகப் பாவாடை, தாவணி, சேலை அணிந்து நடிக்க ஆசையாக இருக்கிறது," என்றும் ஷாலினி தெரிவித்துள்ளார்.
ஷாலினியை ஈர்த்த தமிழ் கலாசாரம்
1 mins read
-

