'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்தின் பெரும் பகுதி ஐரோப்பாவில் படமாக் கப்பட உள்ளது. இதற்காக விறுவிறுப்பான திரைக் கதையை அமைத்துள்ளாராம் நவீன். அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய திகில் படமாக இது உருவாகும் என்றும் சொல்கிறார். "விஜய் ஆண்டனி குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று முன்னணிக் கதாநாயகர்களின் பட்டியலில் அவருக்கும் இடமுள்ளது. எனினும் மிகவும் தன்னடக்கமான, பண் பான மனிதராகக் காணப்படுகிறார்.
"பொதுவாக கதை சொல்லும் கலையில் நான் அவ்வளவு தேர்ச்சி பெற்றவன் இல்லை. இதுகுறித்து என்னை அறிந்தவர் களுக்கு நன்றாகத் தெரியும். விஜய் ஆண்டனியும் இதை எப்படியோ கேள்விப் பட்டிருக்கிறார். "அதனால் அவரைச் சந்தித்த போது, சிரமப் பட்டு உங்கள் கதையை என் னிடம் விவரிக்க வேண்டாம் "மூடர் கூடம்' பார்த் திருக்கிறேன். அது போதும். "உங்களால் எத்தகைய படத் தையும் எடுக்க முடியும்," என்றும் கூறினார். "எனினும் நான் விட வில்லை. கதையைக் கேட்டே ஆகவேண்டும் என்று வற்புறுத்தி கதை சொன்னேன்.
"பொறுமையாகக் கேட்டவர், நான் சொன்ன கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரி வித்தார். தம்மைக் கதாநாய கனாகக் கருதவேண்டாம் என் றும் மாறாக படக்குழுவில் ஒரு வராக ஏற்கும்படியும் விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்ட போது ஆச்சரியப்பட்டுப் போனேன். "இவ்வளவு எளிமையான ஒரு கதாநாயகனைக் காண்பது அரிது," என்கிறார் நவீன்.

