காதல் என்பது இனிமையான அனுபவம் என்கிறார் நடிகை ராஷி கண்ணா. தனக்கு 17 வயதிலேயே காதல் உணர்வு ஏற்பட்டு, அது உடனுக்குடன் முடிவுக்கும் வந்துவிட்டதாகக் கூறுகிறார். இப்போது சினிமாவில்தான் முழுக் கவனமும் இருப்பதாகச் சொல்பவர், மீண்டும் ஒருமுறை காதல் வயப்பட்டால் அதில் நூறு விழுக்காடு உண்மையாக இருப்பது உறுதி என்கிறார்.
"காதல் திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருக்கிறது. சினிமா நடிகையாவேன் என்று நினைக்கவே இல்லை. படித்து முடித்ததும் மாடலிங் செய்தேன். அதைப் பார்த்து இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. அதன்பிறகு தெலுங்குப் படங்களில் நடித்தேன். தமிழிலும் இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறேன். "எனக்கு எது குறித்தும் பயம் கிடையாது. அண்மையில் ஜார்ஜியா சென்ற போது மலைப்பாம்பையே கையில் பிடித்து பக்கத்தில் நின்றவர்களை அதிர வைத்தேன். இந்தத் தைரியம் எனது பாட்டியிடம் இருந்து வந்தது," என்கிறார் ராஷி கண்ணா.

