சாய் பல்லவி: மோதல் ஏதுமில்லை

சாய் பல்லவி: மோதல் ஏதுமில்லை

1 mins read
bcd81bf6-84cb-45c6-a3cd-63dff3b04dd7
-

மருத்துவத் தொழிலில் ஈடுபட வேண்டும் எனும் எண்ணம் தோன்றும் போது திரையுலகில் இருந்து விலகுவதே தமது திட்டம் என்று கூறுகிறார் சாய் பல்லவி. மருத்துவம் படித்துள்ள அவர், தம்மால் யாரும் மனதளவில் காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் நாகசவுரியாவுடன் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், நாகசவுரியா சிறந்த நடிகர் என்றும் படப்பிடிப்பில் அமைதியாக இருப்பார் என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார். 'தியா' படத்தின் படப்பிடிப்பின்போது நாகசவுரியாவுக்கும் சாய் பல்லவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படப்பிடிப்பின்போது நாகசவுகரியாவுடன் பேசாமல் இருந்ததால் அவர் தன்னை தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் என்கிறார் சாய் பல்லவி. "எந்த நடிகருடனும் எனக்கு மோதல் ஏதும் இல்லை," என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.