'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து படத்தின் தொழில் நுட்பப் பணிகள் துவங்கியுள்ளன. நடிகர் சூர்யா தமது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கி றார். 'பசங்க' பாண்டிராஜ் இயக்குகிறார். கார்த்தி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவரது ஜோடியாக நடிப்பவர் சாயிஷா. மேலும் சத்ய ராஜ், சூரி, ஸ்ரீமன், சவுந்தரராஜா, பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இமான் இசையில் ஐந்து பாடல்கள் உருவாகியுள்ளன. முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. "விவசாயம் தான் நாட்டின் ஆணிவேர். ஒரு நாட்டில் விவசா யம் நன்றாக இருக்கிறது எனில், அந்த நாடு நன்றாக இருப்பதாக அர்த்தம். "எனவே விவசாயிகளின் நலனைப் பேணிக்காக்க வேண்டி யது அரசாங்கத்தின் கடமை. இதை உணராத அரசு எந்த வகையிலும் வெற்றி பெறாது," என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியபோது தமிழ்த் திரைப் படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித் தது. இதனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.
தற்போது வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் இப்படக் குழுவினர் பணிகளைத் துவங்கி உள்ளனர். இறுதிக்கட்ட படப் பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், விரைவில் படத்தின் பின்னணி வேலைகளை தொடங்க இருப்ப தாகத் தகவல். "விவசாயம் குறித்து விரிவாக அலசி இருப்பதால், இப்படத்துக்கு இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பு கிறோம். "ஏனெனில் இன்றைய தேதி யில் இளையர்கள்தான் விவசா யம் குறித்தும், விவசாயிகளின் நலன் குறித்தும் அதிகம் பேசி வருகின்றனர். "விவசாயத்தின் எதிர்காலம் குறித்தும் இளையர்கள் தான் அதிகம் கவலைப்படுகின்றனர். பல இளையர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே படம் வெற்றி பெறும்," என படக் குழு வினர் நம்பிக்கையுடன் பேசுகின்றனர்.

