நடிகர்களின் சம்பளம்: ஞானவேல் ராஜா புகார்

நடிகர்களின் சம்பளம்: ஞானவேல் ராஜா புகார்

1 mins read
c20ce324-6fb6-42b5-a81c-6ec47623a851
-

நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கு வதால் திரையுலகம் தள்ளாடுகிறது என்பது தயாரிப்பாளர்களின் புகார். நடிகர்களோ இதை ஏற்ப தாக இல்லை. "நாங்கள் நடிக்கும் படங்கள் கோடிக்கணக்கில் வசூலிக்கும் போது தயாரிப்பாளர்கள் பலமடங்கு ஆதாயம் பார்க்கின்றனர்," என்பது நடிகர்களின் வாதம். இந்நிலையில், நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்காவிட்டால் தமிழ்நாட்டை விட்டே வெளியேறு வேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் தெலுங்குப் படம் 'என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா' என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். சரத்குமார் வில்லன் வேடத்தில் மிரட்ட, அர்ஜுன், நதியா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் தோன்றுகின்றனர். இப்படத்தின் வெளியீட்டை யொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார் ஞானவேல் ராஜா. அப்போது, தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் குறித்து சில புகார்களை வெளிப்படையாகத் தெரிவித்தார்.