'நடிகையர் திலகம்' திரைப்படம் வெளியாகும் முன்பே பலரது பாராட்டு களைப் பெற்று வருகிறது. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறே இத்தலைப்பில் படமாகிறது. காலஞ்சென்ற நடிகர் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷம் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் வெளி யீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத் திருப்பதாக நடிகர் ராணா டகுபதி தெரிவித்துள்ளார். இப்படத்தின் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், துல்கர் சல்மா னும் கீர்த்தி சுரேஷும் பொருத்தமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் வெற்றி பெறவேண்டும் என்றும் ராணா டகுபதி வாழ்த்தி உள்ளார்.
'நடிகையர் திலகம்' படத்தில் சமந்தாவும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். எதிர்வரும் மே 9ஆம் தேதி இப்படம் திரை காண உள்ளதாகக் கூறப் படுகிறது. தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு படங்களின் வெளியீடு பாதிக் கப்பட்டுள்ளது. எனவே 'நடிகையர் திலகம்' படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரி கிறது. எனினும் இதே படம் 'மகாநதி' என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி உள்ளது. தெலுங்குப் பதிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை சாவித்திரி வேடத்தில் நடித் ததை பெருமையாகக் கருதுவதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்காக தன்னைத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி தெரி விப்பதாகவும் கூறியுள்ளார்.
"இந்தப் படத்தில் நடித்தது கனவு போல் உள்ளது. சாவித்திரி அம்மா மிகச் சிறந்த நடிகை. அவரது வேடத் தில் நடித்து பெயரெடுப்பது சவாலான விஷயம். "என்னால் முடிந்தளவு திரையில் அவரைப் பிரதிபலித்திருக்கிறேன். இனி ரசிகர்கள்தான் என் நடிப்பு குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும். ரசிகர்களின் மேலான விமர்சனங்க ளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். "இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
'நடிகையர் திலகம்' படத்தில் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ்

