'விஜய் சிறந்த முன்னுதாரணம்'

'விஜய் சிறந்த முன்னுதாரணம்'

1 mins read
bf24ac8a-52d9-43a3-9392-cd5b49e2193b
-

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது உறு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் தமிழ்ச் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயத்தை சாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமெளலி'. மூத்த நடிகர் கார்த்திக், அவ ருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம் இது.

நாயகிகளாக ரெஜினாவும் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள் ளனர். இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் ஆகியோ ரையும் முக்கிய வேடங்களில் நடிக்க வைத்துள்ளார் படத்தின் இயக்குநர் திரு. படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்பப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென் னையில் நடந்தது. இதில் படக் குழுவினர், நடிகர்கள் சூர்யா, விஷால், சாந்தனு, இயக்குநர்கள் சுசீந்திரன், கவுரவ் நாராயணன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய விஷால், திரையுலகில் படிப்படியாக வளர்ந்தவர்களில் நடிகர் விஜய்தான் சிறந்த முன்னுதாரணம் என்றார்.