அதிரடி சண்டைகளுடன் உருவாகியுள்ள குடும்பப் படம் 'காளி'

1 mins read
92f25707-df43-4ac4-b714-26b674c9ae20
-

விஜய் ஆண்டனி நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'காளி' படம் மே 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிரடி சண்டைக் காட்சிகளைக் கொண்ட குடும்பப் படமாம். அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். சுனைனா, ‌ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோரும் உள்ளனர். யோகி பாபு, ஆர்.கே. சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.