'மன திருப்தியே முக்கியம்'

'மன திருப்தியே முக்கியம்'

2 mins read
6619555b-1732-4b4e-aa42-7bd6998b7e83
-

சத்தமில்லாமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார் இளம் நாயகி ரெஜினா. மிக யதார்த்தமாக நடிப்பதாக இயக்குநர்களிடம் பாராட்டுப் பத்திரம் வாங்கி வைத்திருக்கிறார். பெரிய, சிறிய கதாபாத்திரம் என்றெல்லாம் ரெஜினா எந்தவித பாகுபாடும் பார்ப்ப தில்லை. சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும் கூட ரசிகர்களின் மனதில் இடம்பெற வேண்டும் என்பது மட்டுமே தமது நோக்கம் என்கிறார். அந்த வகையில் அண்மையில் வெளியான 'ஆவ்' இந்திப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். "ஒரு கதையில் இடம்பெறும் பாத்திரங்கள் ஒவ்வொன்றி லும் எந்த மாதிரியான முக் கியத்துவம் உள்ளது என் பதை கணிக்கக்கூடிய திறமை எனக்கு இருக் கிறது. அப்படித்தான் 'ஆவ்' படத்திலும் நடித்தேன்.

"படத்தைப் பார்த்த பலரும் நான் அற்புதமாக நடித்திருந்ததாகப் பாராட்டினார்கள். அந்தப் பாராட்டைக் கேட்கும் போது, பட்ட கஷ்டங்க ளையும் மீறி மகிழ்ச்சி உண்டானது. "அந்தப் படத்துக்காக மூக்கில் சிறு வளையம் போட் டேன். சிகை அலங் காரத்தை மாற்றினேன். பிறகு உடலில் பச்சை குத்திக் கொண்டேன். படத்தில் எனக்கான ஒப்ப னையைப் போட்டு முடிக் கவே பல மணி நேரமாகும். "அந்தப் படம் முடிந்து இப்போதுதான் எனது கேசம் கொஞ்சம் வளர்ந்தி ருக்கிறது. வருங்காலத்தில் நான் இப்படியும் ஒரு கதா பாத்திரம் நடித்திருக்கிறேன் பாருங்கள் என்று தைரிய மாகச் சொல்லமுடியும். இந்த மனதிருப்திதான் முக்கியம்." தென்னிந்திய திரையுலகம் தற்போது நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளதாகக் குறிப் பிடும் அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் பலவிதமான கதைக் களங்கள் கொண்ட திரைக்கதைகளைக் கேட்க முடிவதாகச் சொல்கிறார்.