விஜய் சேதுபதி சில ஆண்டுகளுக்கு முன் பட வாய்ப்பு தேடி பட நிறுவனங்களில் ஏறி இறங்கிய போது, மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' பட நிறுவனத்திலும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அப்போது மணிரத்னத்துக்காக பல நாட்கள் காத்திருந்தும் அவரைச் சந்திக்க விஜய் சேதுபதிக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், இப்போது முன்னணி நடிகராகி விட்ட விஜய் சேதுபதியை மணிரத்னம் தேடி வந்து தன்னுடைய 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடிக்கவைத்துள்ளார்.
அவரது இயக் கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், தியாகராஜன், பிரகாஷ் ராஜ் முதலானோர் நடிக்கும் படம் 'செக்க சிவந்த வானம்'. இந்தப்படத்தின் முதல்நாள் படப் பிடிப்பின்போது அவரைச் சந்திக்கக் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பழைய சம்பவத்தை மணிரத்னத்திடம் நினைவு கூர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதைக்கேட்ட மணிரத்னம் சின்ன புன்முறுவலுடன் நகர்ந்து சென்றாராம்.

