'குறையை நிறையாக ஏற்பேன்'

'குறையை நிறையாக ஏற்பேன்'

2 mins read
fb5a5896-596b-4fc5-a485-45d7343a9454
-

என்னைப் படங்களில் பார்க்கும்போது சற்று உடல் பருமனாகத் தோன்றுவதாக சிலர் சமூக வலைத் தளத்தில் கருத்துகளைக் கூறினர். இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு சில உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து உடல் எடையைச் சற்று குறைத் துள்ளேன். இன்னும் கொஞ்சம் எடையைக் குறைக்க உள்ளேன். நடிப்பு, தோற்றம் போன்ற விஷயங்களில் எனக்கு அக்கறையுடன் ஆலோ சனையைக் கூறும்போது அதற்கு நிச்சயம் செவிசாய்ப்பேன் என்கிறார் மஞ்சிமா மோகன். 'அச்சம் என்பது மடமையடா' படம் மூலம் தமிழில் நடிக்கத் துவங்கிய இவர், இன்னும் பெயரிடப்படாத மூன்று தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

"வடக்கன் செல்பி', 'இப்படை வெல்லும்' உள்பட ஐந்து படங்களில் நடித்துள்ளேன். இளம் ரசிகர்கள் மட்டுமின்றி குழந்தை கள் பலரும் என் படத்தை ரசித்துப் பார்த்து, அவர்கள் வீட்டில் என்னையும் ஒருவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்பெருமை 'அச்சம் என்பது மடமை யடா' பட இயக்குநரையே சாரும். "நான் நடிக்கும் படங்கள், எப் போதுமே ரசிகர்களால் பாராட்டப் படும் வகையில் இருக்க வேண் டும் என்று விரும்புவேன். எனக்குப் பிடித்த தமிழ் நடிகர்கள் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. எல்லா நடிகர் களையும் பிடிக்கும். அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து, அதிக படங்களில் நடிப்பதற்கு ஆசைப்படுகிறேன்.

"கேரள அழகி ப்ரியா வாரியாருக்கு நல்ல நேரம் என்றுதான் சொல்லவேண்டும். ப்ரியாவும் கேரளா; நானும் கேரளா என்ப தால் குறிப்பாக அவருக்குத் தமிழ் ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பிற்காக அவர் சார்பில் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார் மஞ்சிமா மோகன்.

மஞ்சிமா மோகன்.