வரும் மே மாதம் முதல் நிறைய படங்கள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளியீடாக வரிசைகட்டி நிற்கின்றன. விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் மே 11ஆம் தேதியன்று வெளியாவது உறுதியாகி உள்ளது. இதேபோல் 'ஹரஹர மகாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தை மே 4ஆம் தேதி வெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கின் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' திரைப்படம் மே 18ஆம் தேதி அன்று வெளியீடாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ருதா என நான்கு நாயகிகள் நடித்துள்ளனர்.
கௌதம் கார்த்திக்

