'லைகா' தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி, நாக சௌர்யா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் பேய்ப் படம் 'தியா'. படத்தின் பெயர் முதலில் 'கரு' என வைக்கப்பட்டு பின் 'தியா' என மாற்றப்பட்டது. சாய்பல்லவி, நாக சௌர்யா எதார்த்தமான வேடம் என்பதால் இயல்பான கணவன் மனைவியாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முக்கியமாக கணவனுக்கு என்ன ஆகுமோ எனத் தவிக்கும் மனைவியாக சாய் பல்லவியின் நடிப்பில் அத்தனை எதார்த்தம்.
இவர்களையும் கூடத் தூக்கி சாப்பிடுகிறார் பேபி வெரோனிகா அரோரா. அமைதியான பார்வை, அம்மாவின் பாசத்திற்கான ஏக்கம், சாந்தமாகக் கொலை செய்வது எனத் தமிழுக்கு மற்றுமொரு திறமையான குழந்தை நட்சத்திரம் கிடைத்திருக் கிறார். "அவள் பார்க்கும் அனைவரும் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். என்னையும் இறக்கச் சொல் கிறாயா?" என்று 'லாக்கப்'பில் போய் ஒளிந்துகொள்வதுமாக ஆர்.ஜே. பாலாஜி நகைச்சுவையிலும் பயத்தை வெளிப்படுத்தும் போதும் தன்னுடைய திறமையை நிரூபித்திருக் கிறார்.
படத்தில் பிறக்காத குழந்தை பலி வாங்குமா என்று நினைக்காமல் கருக்கலைப்பு சம்பவங்களைத் தீய செயல் என்று கருத்து சொல்லியிருப் பதைப் பாராட்டலாம். மொத்தத்தில் இதுவரை தமிழில் யாரும் சொல்லாத வித்தியாசமான அறிவுரை சொல்லி யிருக்கும் பட்சத்தில் 'தியா' திரைப்படத்தை வரவேற்கலாம்.
சாய்பல்லவி

