'கோட்டயம் குர்பானா'வில் நகைச்சுவையில் கலக்கும் நயன்தாரா

'கோட்டயம் குர்பானா'வில் நகைச்சுவையில் கலக்கும் நயன்தாரா

2 mins read
8a47f46c-303c-42c2-b1b9-81b03ac1e40b
-

'நானும் ரவுடிதான்' படத்தில் நகைச்சுவைக் காட்சியில் நடித்து நல்ல பெயர் கிடைத்ததால் அதுபோன்ற நகைச்சுவைப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார் நயன்தாரா. தற்பொழுது அவர் ஒப்பந்தம் செய்திருக்கும் 'கோட்டயம் குர்பானா' படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் அந்தப் படத்தில் நடிக்க உடனே ஒத்துக் கொண்டாராம் நயன் தாரா.

மலையாளத்தில் நயன்தாரா நடித்த 'புதிய நியமம்' படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. அதன்பின் தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ந ய ன் தா ரா மீண்டும் மலையாளத்தில் 'லவ் ஆக்சன் டிராமா', 'கோட்டயம் குர்பானா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மகேஷ் வெட்டியார் 'கோட்டயம் குர்பானா' படத்தை இயக்குகிறார். இந்தப் படம் நாயகியை மையப்படுத்திய படமாக உருவாகிறதாம்.

இந்தப் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவரை அவர் முற்றிலும் ஏற்று நடித்திராத ஒன்றாக இருக்கும் எனக் கதாசிரியர் ஆர்.உன்னி கூறியுள்ளார். 'நானும் ரவுடிதான்', 'டோரா' ஆகிய படங்களில் ஓரளவு நகைச்சுவைக் காட்சிகளில் நயன்தாரா சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் புதிய படத்தில் நயன்தாரா, தனது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வேடிக்கை, கொண்டாட்டம் எனப் படம் முழுவதும் நகைச்சுவைக் காட்சிகளில் வருகிறாராம். இதுவரை இதுபோன்ற கதையில் எந்த நாயகியும் நடித்ததில்லையாம். நயன்தாரா குண்டர் கும்பலுடன் சேர்ந்து கலக்குகிறாராம். அதுமட்டுமல்ல நயன்தாரா உட்பட இந்தப் படத்தில் அனைத்துக் கதாபாத் திரங்களும் கோட்டயம் வட்டாரமொழியில்தான் பேசுகிறார்களாம்.

மேலும் 'லவ் ஆக்சன் டிராமா' படத்திலும் நயன்தாரா நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தை நடிகர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் என்பவர் இயக்குகிறார். இயக்குநர் துறைக்கு இவர் புதியவர் என்றாலும் இவர் வி.ஐ.பி. குடும்பத்து வாரிசு என்பதால் இவரிடம் தொலைபேசியிலேயே கதை கேட்க சம்மதித்தார் நயன்தாரா.