பெண்கள் யாரையும் சார்ந்து வாழாமல் தங்கள் திறமையை சுயமாக நிரூபிக்கவேண்டும் என்கிறார் ராணி முகர்ஜி. கணவனுடன் சேர்ந்து வாழும் போது பெண்கள் தங்களது தனித்தன்மையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். "கணவர்களுக்கு மனைவியர் அடிமையாகக்கூடாது. கணவருக்கு கௌரவம் கொடுக்கும் அதேநேரம் நமது கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கணவன் காலடியில் மனைவி விழுந்து கிடக்கவேண்டிய அவசியமும் இல்லை," என்கிறார் ராணி முகர்ஜி.
ஆண், பெண் சமநிலை வார்த்தையில் மட்டும் இல்லாமல் தினமும் அதை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடுபவர், எல்லாத் துறைகளிலும் திருமணமான பெண்கள் வேலை செய்ய முடிகிறது என்றும் சினிமாவில் மட்டும் பெண்களைப் புறக்கணிக்கும் நிலை நீடிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். "திருமணமானதும் நடிகைகள் சினிமாவைவிட்டு விலகிவிட வேண்டும் என்ற நிலைமை இருப்பது துரதிர்ஷ்டவசமானது," என்றும் ராணி முகர்ஜி கூறியுள்ளார்.

