குழந்தை நட்சத்திரத்துடன் போட்டி போட்டு நடித்த சாய் பல்லவி

1 mins read
aefc67d1-4548-4ce1-ba5b-89e39e0e28a5
-

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாக சௌரியா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கிறது 'தியா'. இப்படத்துக்கு முதலில் 'கரு' என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களால் அதை மாற்றிவிட்டனர். வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி, ரேகா, நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பிரேமம்' வெளியான பிறகு தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று பலரும் சாய் பல்லவியைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கான பதிலாக 'தியா' அமைந்துள்ளது என்கிறார் சாய் பல்லவி. "இப்படத்தின் கதையைக் கேட்ட பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுபோன்ற நல்ல கதைக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன். குழந்தை நட்சத்திரம் வெரோனிகா நடிப்பில் அசத்தியுள்ளார். அவருடன் பல காட்சிகளில் போட்டி போட்டு நடிக்க வேண்டி இருந்தது," என்கிறார் சாய் பல்லவி.