எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு - அடா சர்மா

எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு - அடா சர்மா

1 mins read
4d8e6114-1e20-403c-9ffe-0d887db5b2aa
-

தன்னை வார்த்தைகளால் துன்புறுத்த நினைப்பவர்களைத் தான் அறவே கண்டு கொள்வதில்லை என இளம் நாயகி அடா சர்மா தெரிவித்துள்ளார். தற்போது பிரபுதேவா ஜோடியாக 'சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், நடிகையான பிறகு விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என சக நடிகைகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். "இது ஜனநாயக நாடு. தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஒருவருடைய கருத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். அதே சமயம் நடிகைகளைக் கேவலமாகப் பேசுவதை எக்காரணம் கொண்டும் ஆதரிக்கமாட்டேன்.

"அலுவலகங்களில் மட்டுமின்றி பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பு இல்லை. எனது பாதுகாப்புக்குத் தனியாக சிலரை நியமித்துள்ளேன்," என்கிறார் அடா சர்மா. பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது கொடூரமானது என்று குறிப்பிட்டுள்ள அவர், எந்த நடிகையானாலும் திறமை இருந்தால் யாருக்கும் பணியவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.