ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளார் விஜய் சேதுபதி. அந்த வகையில் ஒரு படத்தில் விவசாயியாக நடிக்க உள்ளார். 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்க உள்ள அந்தப் படத்தில் ரஜினி நடிப்பதாகவும், இதற்கு 'கடைசி விவசாயி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்பு கூறப்பட்டது. தற்போது ரஜினிக்குப் பதில் சேதுபதி நடிக்க உள்ளார். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக உருவாகிறது.
நகைச்சுவை கலந்த திரைக்கதை ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குமாம். ஏற்கெனவே மணிகண்டன் இயக்கத்தில் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. 'சீதக்காதி', 'சயீரா நரசிம்ம ரெட்டி', 'டிராபிக் ராமசாமி', 'செக்க சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரஜினியின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

