பலமுறை பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ள நேரிட்டதாகச் சொல்கிறார் நடிகை ரெஜினா. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தையும் அவர் விவரித்துள்ளார். ஒருமுறை சென்னையில் உள்ள பிரபல ஈகா திரையரங்கம் அருகே உள்ள பாலத்தில் நண்பர்கள் சிலருடன் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த இளையர் ஒருவர் திடீர் என ரெஜினாவின் உதடுகளைப் பிடித்துள்ளார். இதனால் ரெஜினாவும் நண்பர்களும் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயுள்ளனர்.
"அந்தச் சம்பவத்தில் இருந்து மீள எனக்கு சில நிமிடங்கள் ஆனது. பின் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து எனக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அந்நபரைத் திட்டினேன்," என்கிறார் ரெஜினா. இதே போல் அவருக்குப் பலமுறை நிகழ்ந்துள்ளது என்பதுதான் சோகம். இதற்காக தாம் அழுதது மட்டும் இன்றி, பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டித்து அடித்தும் இருப்பதாகச் சொல்கிறார்.

