நகைச்சுவையான திகில் படம் - 'இருட்டு அறையில் முரட்டு குத்து'

நகைச்சுவையான திகில் படம் - 'இருட்டு அறையில் முரட்டு குத்து'

1 mins read
82304dd6-e834-4b9f-8d15-0bc0704f5240
-

வெளியீடு காணும் முன்பே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து'. அண்மையில் இப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது படத்தின் முன்னோட்டம், பாடல்கள் குறித்து எழுப்பப்பட்டட கேள்விகளுக்கு இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் அளித்த பதில்கள் சில செய்தியாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். படத்தில் ஆபாசம் மிகுந்திருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். வைபவி ஷாண்டில்யா, யா‌ஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று நாயகிகள் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது. "ஒரு படத்தை பொழுதுபோக்குப் படமாகப் பார்த்தால், பொழுதுபோக்காக மட்டுமே தெரியும். அப்படித்தான் என் படத்தைப் பார்க்க வேண்டு," என்கிறார் சந்தோஷ். இப்படம் வரும் 4ஆம் தேதி வெளியாகிறது.