கன்னடத்தில் பாடும் சிம்பு

கன்னடத்தில் பாடும் சிம்பு

1 mins read
753429fc-396e-4ffd-bc58-c35bb4bca635
-

தமிழில் பல பாடல்களைப் பாடியுள்ள சிம்பு தற்போது கன்னட படமொன் றில் பாடகராக அறிமுகம் ஆகிறார். 'இருவுதெல்லவா பிட்டு' என்ற கன்னட படத்தில் அவர் பாடிய பாடல் இடம்பெறுகிறது. காவிரி விவகாரத்தில் அரசியல் வாதிகளை ஒதுக்கிவிட்டு இரு மாநில மக்களும் பிரச்சினையை சமாதானமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று அண்மையில் சிம்பு கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் கன்னட படத்தில் பாடுவது பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. மேலும், சந்தானம் நடிப்பில் வெளியான 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு இசையமைத்த அவர், அடுத்து ஓவியா நடிக்கும் '90 எம்எல்' படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.