கோயம்புத்தூர் தனக்குப் பிடித்தமான ஊர் என்கிறார் நிக்கி கல்ராணி. அண்மையில் அங்கு நடைபெற்ற கடைத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கோவை மக்களையும் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றார். கடைத்திறப்பு நிகழ்வில் பங்கேற்ற சிறுவர்களுடன் சில நிமிடங்கள் பேசிய அவர், பின்னர் அவர்களுக்குத் துணிகளைப் பரிசாக வழங்கி புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனால் உற்சாகமடைந்த சிறுவர்கள், "நன்றிக்கா..." என்று சொன்னபோது, நிக்கி முகத்தில் பெரிய புன்னகை மலர்ந்தது. சிறுவர்களிடம் மீண்டும் சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றார்.
நிக்கிக்குப் பிடித்தமான ஊர்
1 mins read
-

