மீண்டும் கவனம் ஈர்க்கும் இனியா

மீண்டும் கவனம் ஈர்க்கும் இனியா

1 mins read
5d42cad4-63bf-4195-973c-dfdad2727062
-

சமூக வலைத்தளத்தில் நடிகை இனியா வெளியிட்டுள்ள கவர்ச்சிப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. 'வாகை சூடவா' படம் மூலம் பிரபலமானவர் இனியா. இந்தப் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதும் கிடைத்தது. இதில் அவர் பாடிய 'சரசர சார காற்று வீசும்போது' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இதையடுத்து பல படங்களில் நடித்தவருக்கு மலையாளத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

யார் கண்பட்டதோ தெரியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இனியாவுக்கு படங்கள் குறைந்து விட்டன. கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் இயக்குநர்கள் அவரை ஒதுக்குவதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது பரத்துடன் 'பொட்டு' என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து முடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனால் இயக்குநர்கள் பார்வை மீண்டும் அவர் பக்கம் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.