சமுத்திரக்கனி: 'நாடோடிகள் 2' வெற்றியில் சந்தேகமே இல்லை

சமுத்திரக்கனி: 'நாடோடிகள் 2' வெற்றியில் சந்தேகமே இல்லை

1 mins read
6c64e886-ffba-4d3b-8913-a939abc2f06f
-

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகி வருகிறது 'நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகம். சசிகுமார், அஞ்சலி இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். அதுல்யா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக வசூலில் அசத்தியது. அனைத்துத் தரப்பினரும் இப்படத்தை ரசித்தனர்.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்த கோபால் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' தற் போது உருவாகி வருகிறது. இதில் பரணி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகி யோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனியும் அசத்த உள்ளார்.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கி உள்ளனர். யுகபாரதி எழுதி யுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபா கரன் இசையமைத்துள்ளார். "முதல் பாகத்தைப் போலவே இதி லும் அனைவரையும் கவரக்கூடிய பல் வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளையர்களைக் கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும். "இந்தக் கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை," என்கிறாராம் சமுத்திரக்கனி.

'நாடோடிகள் 2' படப்பிடிப்பில் அஞ்சலி, சமுத்திரக்கனி, சசிகுமார்.