பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகி யாகவும் நடித்துள்ள 'தொட்ரா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வ மணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், மீரா கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் நடிகர் பரத் பேசும்போது, 'தொட்ரா' படத்தின் தலைப்பே மனதைக் கவரும் வகையில் உள் ளது என்றார்.
"எனக்கு 'காதல்' படம் திருப்பு முனை ஏற்படுத்தியது போல், பிருத்விக்கு இந்த 'தொட்ரா' படம் அமையும் என சொல்கிறார்கள். உண்மைதான்... அந்தப்படம் எனக்கு மட்டுமல்லாமல் அதில் பணியாற்றிய பலருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. அதேபோல இந்தப் படமும் ஒரு காவியமாக அமையும் என நம்புகிறேன்," என்றார் பரத். ஜெ.எஸ்.அபூர்வா புரொடக் ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் `தொட்ரா'. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
'தொட்ரா' படத்தின் ஒரு காட்சியில் பிருத்விராஜன், வீணா

