திரைத்துறைதான் என் கல்லூரி என்கிறார் தமன்னா

திரைத்துறைதான் என் கல்லூரி என்கிறார் தமன்னா

1 mins read
9b394240-3930-4a9c-ace1-efe77a5d1919
-

திரையுலகப் பயணம் என்பது கல்லூரி வாழ்க்கையைப் போன்றது என்கிறார் நடிகை தமன்னா. ஏனெனில் கல்லூரியைப் போலவே திரைத்துறையிலும் தினமும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்கிறார். பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே தமன் னாவுக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு நடித்தார். சினிமா என்ற கனவுலகுக்குள் கால் பதித்ததும், மற்ற சில விஷயங்கள் தன்னால் முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்­ கிறார். "ஆமாம்... பள்ளி முடித்த பின்னர் கல்லூரி என்பது இயல்பாக நடக்க வேண்டிய விஷயம். ஆனால் எனக்கு அப்படி அமைய வில்லை. கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்காத வருத்தம் இருந்தது.

"ஆனால் சினிமாவில் அந்த அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. நான் தெலுங்கில் முதலாவது நடித்த 'ஹேப்பி டேஸ்' படத்தில் கல்லூரி மாணவியாகத்தான் வந்தேன். வாழ்க்கையில் நடக்காதது சினிமாவில் நடந் தது. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி," என்று சொல்லும்போதே தமன்னா முகத்தில் பூரிப்பு குடிகொள்கிறது. பாடங்களைத் தீவிரமாகப் படிப்பது, தேர்வுக்குத் தயாராவது, தேர்வு முடிவுகளுக் காகக் காத்து இருப்பது என்பன போன்ற எல்லா அனுபவங்களும் திரையில் ஏற்ற கதாபாத்திரங்கள் மூலம் கிடைத்தனவாம்.