வெகுவாக எதிர்பார்த்த சில படங்கள் வெற்றி பெறாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் ஆர்யா. கைகொடுப்பதற்கு அவரது நண்பர் சந்தானமும் இல்லை. சந்தானமும் இப்போது கதாநாயகனாகி விட்டதால், தன் பிழைப்பில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஆர்யா வெகுவாக நம்பியிருப்பது 'கஜினிகாந்த்' படத்தை தானாம். இதில் அவரது ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். படம் முழுக்க நகைச்சுவை இருக்குமாம். இயல்பாகவே ஆர்யாவும் கலகலப்பான மனிதர் என்பதால் இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க வைக்கும் என்கிறார் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார். இதில் கருணாகரன், சதீஷ், காளிவெங்கட் ஆகியோரும் ஆர்யாவுடன் நகைச்சுவை கூட்டணி அமைத்துள்ளனர்.
ஆர்யா, சாயிஷா

