சம்பளத்தைவிட நல்ல படங்களுக்குத் தான் முக்கியத்துவம் தருவதாகச் சொல்கிறார் இளம் நாயகி அதிதி ராவ். இவர் தாம் நவநாகரிக உடைகளை அணிந்தாலும்கூட குடும்பப் பாங்கான பெண்ணைப் போல் காட்சியளிப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். எனவே கவர்ச்சி வேடம் தமக்குப் பொருத்தமாக இருக்காது என்கிறார். "தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பது தனி அனுபவம். நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகச் சிலர் பேசுகிறார்கள். இதுபற்றி கவலைப்பட வேண்டியது தயாரிப்பாளர்கள்தான். மற்றவர்களுக்கு என்ன வந்தது என்று சொல்லும் அதிதி 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார்.
அதிதி ராவ்: கவர்ச்சி எனக்கு ஒத்து வராது
1 mins read
-

