தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைகளில் 'நம்பர் 1' நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. அவர் இப்போதெல்லாம் கதாநாயகர்களுடன் கட்டிப்பிடித்துப் பாட்டுப்பாடி ஆடி நடிக்கும் படங்களை விரும்புவதில்லை. தனிக்காட்டு ராணியாக தனித்து நின்று நடிக்க விரும்புகிறார். அதனால் புது இயக்குநர்களாக இருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்கள் என்றால் சம்பளம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறார். 'மாயா', 'அறம்' படங்களின் வெற்றி இதற்கு முக்கிய காரணம். இப்போது இதே பாணிக்கு வந்திருக்கிறார் ஹன்சிகா.
'பப்ளிமாஸ்' நடிகை, அழகு பொம்மை என்ற பட்டங்களை உடைத்தெறிந்து தானும் நடிப்புத் திறமையை வெளிக்காட்டவேண்டும் என்று கருதுகிறார் ஹன்சிகா. அதற்காக இப்போது அறிமுக இயக்குநர் ஜமால் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஜமால், இயக்குநர் லட்சுமணனிடம் உதவியாளராக இருந்தவர். 'ரோமியோ ஜூலியட்' படத்தில் ஹன்சிகா நடித்தபோது அவருக்கு நன்கு அறிமுகமாகியிருந்த ஜமால், இப்போது ஹன்சிகாவிடம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையைச் சொல்லி ஹன்சிகாவிடம் ஒப்புதல் வாங்கி விட்டார். இது சண்டை கலந்த பேய்ப் படம். நாயகிதான் படம் முழுவதும் வருகிறார். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது. மொத்தம் 55 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
இதில் 25 நாள் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் 'நம்பர் 1' நடிகையை பின்பற்றும் ஹன்சிகா நடக்கின்றன. இந்த ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தைப் பற்றிய முழு விவரம் விரைவில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட இருக்கிறது.

