புகழின் உச்சியில் இருக்கும் நடிகை அனுஷ்கா தமிழ்த் திரையில் உயரமான நடிகை என்று கூடச் சொல்லலாம். 'பாகுபலி' படத்தின் மூலம் தனியான சிறப்பைப் பிடித்துவிட்டார். 'அருந்ததி', 'பாகமதி' எனச் சில நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளால் அவருக்கு ஒரு தனி இடம் கிடைத்தது. அனுஷ்கா மற்ற நடிகைகளைப்போல கிடையாது. பொது விழாக்களில் கூட அவர் இயல்பான பெண் போலவே எளிமையாக இருப்பார்.
திருமண வயதைக் கடந்து சென்றாலும் அதிகமான படங்களில் நடிக்காமல் முக்கியமான கதைகளுக்காக பொறுமையுடன் காத்திருக்கிறார். காதல் கிசுகிசுக்களில் அவர் அடிபட்டாலும் பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் மணமகனை திருமணம் செய்வதற்காகக் காத்திருக்கிறார். தற்பொழுது அனுஷ்காவிற்குப் படங்கள் இல்லாததால் அவர் ஆன்மீக சுற்றுப் பயணம் சென்று இருக்கிறார். கேதார்நாத் கோயிலுக்கு அவர் சென்ற புகைப்படங்கள், காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

