"கணவர், குழந்தைகள் என்று மகிழ்ச்சியான இல்லறவாழ்வில் ஈடுபட்டிருக்கும் பூர்ணா திடீரென ஓர் அதிர்ச்சி சம்பவத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. தன்னுடைய குழந்தைகளைக் கொல்லத் துடித்துக் கொண்டிருக்கும் பேயிடமிருந்து குழந்தைகளை பூர்ணா எப்படி காப்பாற்றினார் என்பதே 'குந்தி' என்கிற படத்தின் கதை," என்கிறார் படத்தைத் தமிழில் மறுபதிப்பு செய்திருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா. தெலுங்கில் 'ராட்சசி' என்கிற பெயரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தப் படம்.
பண்ணா ராயல் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு யஜமன்யா இசை. படத்தில் முப்பது நிமிடத்துக்கு இடம் பெற்றிருக்கும் 'கிராஃபிக்ஸ்' காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக 'அருந்ததி', 'காஞ்சனா', 'சந்திரமுகி' போன்ற படங்களுக்குச் சவால்விடும் வகையில் திகிலாகவும், பிரமிப்பாகவும் இருக்கும் என்கிறார் ராஜராஜா.

